Sunday, November 15, 2015

உருளை தேன்குழல் செய்வது எப்படி ?

என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு 2
சீரகம் அல்லது எள் - 1 டீஸ்பூன்
தயிர் - கால் கப்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - 2 கப்
ஜவ்வரிசி மாவு - ஒரு கப்
நெய் அல்லது வெண்ணெய் - 4 டீஸ்பூன் உளுந்து மாவு - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு பெருங்காயத் தூள் - சிறிதளவு

எப்படிச் செய்வது?
உளுந்தை நன்றாக வறுத்து, மாவாக்கிக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளுங்கள். மசித்த உருளைக் கிழங்குடன் தயிர், அரிசி மாவு, சீரகம், மிளகாய்த் தூள், ஜவ்வரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைத் தேன்குழல் அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமானதும் எடுத்துவிடுங்கள்.

source.hindu

No comments:

Post a Comment